திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆதித்தனார் மண்டபத்தில் கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை, சன் பில்டர்ஸ் இணைந்து நடத்திய மாபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் சன் லயன்ஸ் சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர்,கூட்டு மாவட்ட துணை தலைவர் லயன்.டாக்டர் டி.பி.ரவீந்திரன் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் இதயா, டாக்டர் நவிலா அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்டார தலைவர் கிரண் ரவீந்திரன்,முன்னாள் மாவட்ட இணைப் பொருளாளர் லயன்.பி.டி.திரவியம் , தலைவர் லயன். ஜெய பிரகாஷ் , செயலாளர் லயன். ராம லட்சுமி பொருளாளர் லயன். பிச்சை மற்றும் 2024-2025 ஆண்டிற்கான தலைவர் லயன்.J.சுதாகர் செயலாளர் லயன். செந்தில்குமார், பொருளாளர் பேராசிரியை முனைவர் லயன். ர.மங்கையர்க்கரசி, முன்னாள் தலைவர் லயன்.ஜெரால்ட் ராஜா, ,லயன். சேகர்,லயன்.சுரேஷ் பால்ராஜ் ,ஆசிரியை லயன். சகாய ராணி ,லயன். ஷோபியா,லயன். ஐஸ்வர்யா, திருமதி மேகலா மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இம்முகாமில் மேல்மலை பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால், பெருமால் மலை, அடுக்கம், வில் பட்டி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர், உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
50-க்கும் மேற்பட்ட பார்வை குறைபாடு உள்ளோரை கண் அறுவை சிகிச்சைக்காக தேனி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு இலவசமாக பேருந்து மூலம் உணவு வழங்கப்பட்டு தங்கும் இடம் இலவசமாக செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் லயன் மனோகரன் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார்.