பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.
திருப்பூர் மாவட்டம்,
பல்லடத்தை அடுத்த பொங்கலூர் புல்லி காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி 50. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் தனலட்சுமி இடம் பேச்சு கொடுப்பது போல் பாசாங்கு செய்து அவரிடமிருந்த தங்கச் செயின், வளையல்கள் மற்றும் மோதிரம் என ஒன்பது சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறைத்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அவினாசி பாளையம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தகுமார் 45, சுரேந்தர் 28, ரூபன் என்கிற அமிர்த ரூபன், ரமேஷ், என ஒரு பெண் உள்பட ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் திட்டமிட்டு தனலட்சுமி இடம் தங்க நகை கொள்ளை அடித்தது தெரிய வந்தது தொடர்ந்து அவர்களிடம் மிர்ந்து ஒம்போது சவரன் நகை மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.