பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டுமாரியம்மன், ஸ்ரீநொண்டி கருப்புசாமி ஆலய
திருவிழா கடந்த 23 ந்தேதி சந்தனகாப்புடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து சக்தி அழைத்தல்,காப்பு கட்டுதல்,ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன்,
மூப்பனார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்த நிலையில் இன்று விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலிக்கு வந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.விழாவில் நா ளைபொங்கல் மாவிளக்கும் நாளை மறுதினம் கிடாவெட்டு அன்னதானமும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.