கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், வட்டம் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணை நிரம்பக் கூடிய சூழ்நிலையில் உள்ளது.
எனவே பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பவானி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.