தென்மேற்கு பருவ மழை தீவிரம் எதிரொலி சுருளி அருவியில் வெள்ள பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை ஈத்தக்காடு தூவனம் அணை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தீவிர தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டு நீரோடைகள் அருவியில் வரும் தண்ணீரில் கலந்து வெள்ளமாக கொட்டுகிறது
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் மீண்டும் நீர்வரத்து சீராக வரும் போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.