கோவையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் காலை சிற்றுண்டி,இனிப்புகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் பிறந்த நாளை முன்னிட்டு ,கட்டிட தொழிலாளர்கள் பாதுகாப்பு தினமாக கோவையில் கொண்டாடப்பட்டது..
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு,சமூக நீதி கூட்டமைப்பு, மற்றும் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு ஆகியோர் சார்பாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்,மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில்,தொழிற்சங்க கூட்டமைப்பின் கொங்கு மண்டல தலைவர் ஜி.முகம்மது ரபீக் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில், கொங்கு மண்டல செயலாளர் அமுதம் மகேஷ் குமார்,மற்றும் நிர்வாகிகள்,பொறியாளர் அழகிரி,சுரேஷ் மார்ட்டின்,அர்ஜூன் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக பொது செயலாளர் குரு நாகலிங்கம், மாநில துணை தலைவர் இராம வெங்கடேஷன்,மாவட்ட தலைவர் லயன்.ஏ.அருள்தாஸ்,வள்ளலார் வைத்தியசாலை ஈசன் குருஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆத்துப்பாலம் பகுதியில் காலை வேளையில் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கலிக்கம் பரிசோதனை முகாமில் கண்,காது,மூக்கு,பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பயன் பெற்று காலை சிற்றுண்டி மற்றும் இனிப்புகளை வாங்கி சென்றனர்..
அனைவரும் இணைந்து அனைத்து தொழிலாளர்களின் பாதுகாவலனாக இருக்கும் தலைவர் பொன் குமார் நூறாண்டு வாழ தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
இந்நிகழ்ச்சியில், அருள் டி.செல்வம்,குர் ஆன் அறக்கட்டளை தலைவர் ஜக்கிரிய்யா,ஏ.கே.எம்.ஜானி,கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்..