அதிமுகவின் கோரிக்கையை சட்டமன்றத்தில் ஏற்க வேண்டும்- கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி…

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட விவகாரம் , நீட் தேர்வு குளறுபடிகள், விவசாயிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கள் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர், அதன் உண்மையை கண்டறிய அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் அதிமுகவின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனவும் அதிமுகவினர் சஸ்பென்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் இந்த விசயத்தில் கவலை கொண்டால் மட்டும் போதாது, நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி சார்பிலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே இதற்கு தீர்வாகும் எனவும் இது சம்பந்தமாக ஜீலை 6ம் தேதி ஆலோசனை கூட்டம் என் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தில் இல்லாத மரபுகளை தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்படுத்தியுள்ளனர் என தெரிவித்த அவர், உறுதிமொழியை தாண்டி ஒருசிலர் பெயர்கள், முழக்கம் எழுப்பி உள்ளனர். பாலஸ்தீனம், இந்து இராஸ்டிரம் போன்ற முழக்கம் வருவதற்கு காரணமாக அமைத்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்க்கலாம் கேள்வி குறியாக மாற்றும் நிலை இருக்க கூடாது. இப்போது உள்ள தேர்தல் அமைப்பு கலைக்கப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான் எனவும் ஆனால் அது வணிக நோக்கில் செயல்பட தொடங்கி உள்ளது என்றார்.

மாணவர்களின் உண்மையான திறமை அடிப்படையில் செயல்பட வேண்டும். நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகி உள்ளது. நீட் பயிற்சி நிலையங்கள் விதிமுறைகள் மீறி செயல்படுகின்றனர்.

நீட் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் புகைப்படங்களை தடை செய்ய வேண்டும். நீட் தேர்வில் கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

மேலும் ஆங்கிலத்தில் இருந்த சட்டங்கள் ஹிந்தியில் மாற்றம் செய்யப்பட உள்ளதை குறிப்பிட்ட அவர் அனைத்து மொழி பேசும் மக்களும் பேசும் அளவிற்கு அதை வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் அனைவரும் உச்சரிக்க முடியாது என்பதால் வழக்கறிஞர்கள் இதற்காக நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கோரிக்கைகள் நியமானது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *