தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வீ. ஷஜீவனா தலைமையில் இன்று சமாபந்தி நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளான பூலானந்தபுரம் சின்னமனூர் கருங்கட்டான்குளம் முத்தலாபுரம் சின்ன ஓவுலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு இன்று 27.06 .2024 அன்று சமாபந்தி நடைபெற்றது.
இதில் சின்னமனூர் சாமி குளம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சுமார் 3 தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் அதற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டு ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூறியதாவது மூன்று தலைமுறைகளாக சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம் குடியிருப்பதற்கு சான்றாக வீட்டு வரி மின் இணைப்பு குடிநீர் இணைப்பு ஆகிய பல்வேறு ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் சுமார் 25 வருடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது உத்தமபாளையத்தில் நடைபெற்ற சமாபந்தி நிகழ்வில் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விண்ணப்பம் கொடுத்துள்ளதாக கூறினார்.