காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பால் முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
பக்தர்கள் ஸ்ரீ பால் முனீஸ்வரரை வணங்குவதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர் அப்பொழுது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறை காசுகள் கீழே சிதறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில் நிர்வாகத்தினர்
உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து அருகில் இருந்த பீரோவை பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரீடம் திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும் கோவில் உண்டியலின் காணிக்கையை வருட வருடம் எண்ணுவது வழக்கம் அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 20000 வரை இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
தற்போது இந்த உண்டியலில் சுமார் 15,000 க்கு மேலான ரூபாய்கள் இருந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்
பால் முனிஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் போலீஸ் பூத் இருந்து வருகிறது. இந்த போலீஸ் பூத்தில் போலீசார் இல்லாமல் 24 மணி நேரமும் பூட்டிருப்பதாலும் போலீஸ் பூத் அருகில் வைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாலும் ஒரகடம் போலீசார் ரோந்து பணியில் சரியாக ஈடுபடாததாலும் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடர்கள் மிகவும் துணிச்சலோடு திருடி வருவதால் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
ஆகவே அப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் போலீசார் நியமித்து 24மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் சிசிடிவி கேமராக்கள் சரிசெய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்