பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் போதை ஒழிப்பு மரக்கன்று நட்டு விழிப்புணர்வு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வழக்கறிஞர் சங்கம் தேனி ஹனி அரிமா சங்கம் மற்றும் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போதை ஒழிப்பு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு பெரியகுளம் மற்றும் தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தலைமை வகித்தனர் பெரியகுளம் டிஎஸ்பி சூரகுமாரன் முன்னிலை வகித்தார் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு மரக்கன்றுகள் நட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் இருபால் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.