பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 2024 – மற்றும் வைட்டமின் – ஏ முகாமினை மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவர் க.கற்பகம் அவர்களின் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் எளம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதாப் குமார், எளம்பலூர் ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.