போயர் சமுதாய மக்களால் போற்றபடும்,கிருஷ்ண போயர் வாழ்க்கை வரலாறு கை கூறும் விதமாக,கிருஷ்ண போயர் யார்? எனும் நூல் வெளியீட்டு விழா கோவை ஈச்சனாரி பகுதியில் ஜஸ்மா தேவி மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு போயர் முன்னேற்ற நல அறக்கட்டளையின் தலைவர் எம்.எம்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் தேவராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவை சமூக ஆர்வலர் சௌந்தர்ராஜன் தொகுத்து வழங்கினார்.விழாவில்,அனைத்து மத தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள்,தன்னார்வ அமைப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர்,போயர் சமூகத்தினருக்கும் பிற சமுதாயத்தினருக்கும் இருந்த ஒற்றுமையை சுட்டி காட்டிய அவர்,பிறருக்கு உதவுவதால் மட்டுமே ஒருவர் நூறுவருடங்களுக்கு மேல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு சமுதாயம் முன்னேற அதிகாரம் அவசியம் எனவும்,அனைத்து சமுதாயத்தினரும் அந்த அதிகாரத்தை பெற கல்வி முக்கியம் என தெரிவித்தார்.