எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் நலம் பெற வேண்டிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடந்த வாரம் திடீர் உளநல குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சேகர், வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன்
மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.