கடலூர் மாவட்டம் கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம்
மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் மீனாட்சி முன்னிலையிலும் நடைபெற்றது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள்.
1.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்
2.2 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி. பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.
3.சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர். பி. செவிலியர்கள், உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியமும
4.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.
5 .அரசுத்துறைகளில் 2. 677 611 காலிப்பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
6.அனைத்தையும்
கருணை அடிப்டையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மறைவிறகுபின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணியிடம் மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்
7.அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பளுவினைக் குறைக்க வேண்டும்.
8.அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.
9.முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் இறுதியில் பழனிவேல் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்