பல்லடம் நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை வளாகம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி சார்பில் தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள் என்ற தலைப்பில் அரசு மருத்துவமனை வளாகம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.பல்லடம் நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் கலந்துகொண்டு தூய்மை செய்யும் பணியை துவக்கி வைத்தார்.
மேலும் பல்லடம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள்,ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.