காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு நிஷா வ/8 உள்ளிட்ட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சின்ராசு ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்.
முதல் மகள் நிஷா நெமிலி அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நெமிலி – ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் தர்மசாஸ்தா ஹோட்டல் எதிரே அவர்களுக்கு சொந்தமான மூன்று சக்கர ரிக்ஷா வண்டியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி நிஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த லாரியின் இடது பக்க பின் சக்கரத்தில் நிஷா மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான லாரியின் ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பு சென்றுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எட்டு வயது சிறுமி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.