தேனி அருகே தாடிச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தாடிச்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஸ்ரீ தயாளன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இந்த கிராம சபை கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மனு அளித்தார்கள் மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பழுதடைந்த கிராமப் பகுதி வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
இக்கூட்டத்தை ஊராட்சி செயலர் ஆண்டவர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.