புதுச்சேரி ஜூலை 4.

புதுச்சேரி தலைமை காவலர் விஜயகுமார் டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் வீட்டு மனைகள் மற்றும் சொந்தமாக வீடுகள் வாங்கி பயன் பெறும் விதமாக பொதுநலனில் அக்கறை கொண்டு 2007 ஆம் ஆண்டில் புதுச்சேரி காவல் பணியாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் (Puducherry Police Personnel Co-operative Housing Society, P.772) ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் செயல்படாமல் இருந்து வந்தது. அதன் பின்னர் ஒரு சில வருடங்களுக்கு பின்பு முழுமையாக புதுச்சேரி காவல் பணியாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முடக்கப்பட்டு விட்டது. மற்ற எல்லா மாநில காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் நலனுக்காக காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதேபோல் புதுச்சேரியில் உள்ள எல்லா பொது அரசு துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் நலனுக்காக கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என்ற பெயரில் 36 சங்கங்கள் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு என்று கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இன்றளவும் தொடங்கப்படாமல் இருக்கிறது. எல்லா காவலர்களும் காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்கள்.

புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் புதிதாக புதுச்சேரி காவலர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *