சுவச்ச பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு நடமாடும் கழிப்பறை வாகனம் ஒன்று சுற்றுலா துறை மூலம் காரைக்கால் நகராட்சிக்கு வந்தது!
அதன் மதிப்பு ஏறக்குறைய 5லட்சத்தை தாண்டும்! அவ்வாகனம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது காந்தி பூங்கா திடலில் மண்ணுக்கு இரையாகும் நிலையை தேடி அனாதையாக நிற்கிறது!
அதில் சிறிதும் தேய்மானம் இல்லாத நான்கு டயர்கள் பாதுகாப்பின்மையால் சமூக விரோத கும்பலால் திருட்டு போகும் அவலநிலையில் உள்ளது!!
இதைப்போல் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஏறக்குறைய 20லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பாப்காட் (Bobcot)என்ற குட்டி ஜேசிபி வாங்கப்பட்டது,
அதற்கும் இதே பராமரிப்பு இல்லாத அவலநிலை தான்! அது தற்போது எந்த குப்பைமேட்டில் உறங்குகிறதோ!! நகராட்சி நிர்வாகமே! பழுதடைந்த நடமாடும் கழிப்பறை வாகனத்தை பழுதுநீக்கி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறோம்.