சேத்துப்பட்டு வட்டாரத்தில் வேளாண்மை உர ஆய்வாளர் திடீர் ஆய்வு
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டு,நம்பேடு, கொம்மனந்தல், மன்சூராபாத், ஆத்துறை, ஆகிய கிராமங்களில் உள்ள உர விற்பனை நிலையங்களில். யூரியா, பொட்டாஷ், டி ஏ பி, உள்ளிட்ட விவசாய இடுபொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளதா, மேலும் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்கிறார்களா, என்று வட்டார வேளாண்மை உர ஆய்வாளர் முனியப்பன், உர விற்பனை நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதம் யூரியா வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் பொருட்களை தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது, என்று விற்பனையாளர்களிடம் கூறினார்.