பெரம்பலூரில் தனியார் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களின் அறிவுறுத்தலோடு, சோழமண்டல தளபதி சின்ன ஐயா சுரேஷ் மூப்பனார் வழிகாட்டுதலோடு, பெரம்பலூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்பிரமணி ஆகியோர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா திருச்சியில் உள்ள உழவர் சந்தை பகுதியில் மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் அவர்களின் தலைமையில் நடைபெற இருப்பதால் பெரம்பலூரில் உள்ள த.மா.க சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ள மாநில தலைவர்கள் ,வட்டார, நகர, பேரூர், தலைவர்கள் அனைவரும் முயற்சித்து விழா வெற்றி பெறும் வகையில் அமைய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில, நகர ,வட்டார ,பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.