தென்காசி நகராட்சி பகுதி நான்காவது வார்டு உடையார் தெரு பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் துவக்கப்பள்ளியானது சுமார் 80 ஆண்டுகளாக கல்விச் சேவையை வழங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
இப்பள்ளியில் பயிலும் முதல் வகுப்பு மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்துவதற்காகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களும் ஆங்கில பயிற்சி மற்றும் வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் ஆங்கில வாசிப்பு பயிற்சி புத்தகத்தினை தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்கள் சொரூபா , பெரியசாமி, ஜாஹிரா , ஆகியோர் கலந்து கொண்டனர்.