தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் – திட்டம் குறித்த பயிற்சியானது தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் வட்டார மருத்துவர்கள், ஆர் பி.எஸ்.கே மருத்துவர்கள் மற்றும் தனியார் பரிசோதனை நிலைய பணியாளர்களுக்கு நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மரு.பிரமேலதா, இணை இயக்குநர் நலப்பணிகள் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
மாவட்ட சமூக நல அலுவலர்,
பே. மதிவதனா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைபெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், திருமண உதவி தொகை திட்டங்கள் மற்றும் கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டம்-1994 பற்றி விரிவாக கூறினார்.
மாவட்ட சுகாதார அலுவலர், மரு.கோவிந்தன்,குழந்தை திருமணம், இள வயது கற்பம் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் ஆரோக்கியமான உணவு முறை பற்றியும் விவரித்து கூறினார்கள்.
காவல் ஆய்வாளர் அன்ன பூரணி பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு, பெண்களுக்கான சட்டங்கள் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பணிபுரியுமிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்கள்.,
சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி
ஜெ.ஜெயராணி,செயல்பாடுகள் மற்றும் பெண்கள் உதவி எண் 181 பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,ஜெ.புஸ்பராஜ்,
பாலின நிபுணர்,கபரியேல் பொன் ஆசிர்
மாவட்ட மகளிர் அதிகார மையம், திட்ட செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகள் உதவி எண் 1098 பற்றியும் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்