கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்த வருகின்றனர் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரிலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரிலும், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரிலும் மரு.சித்ரா,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (மருத்துவம்), மரு.செந்தில்,மாநில திட்ட அலுவலர் மற்றும் மரு.ஆ.தர்மர், இணை இயக்குநர் நலப்பணிகள், மரு.மதன்குமார், முதன்மை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை ஊத்தங்கரை,அ.திருநாவுக்கரசு, நேர்முக உதவியாளர், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம் கிருக்ஷ்ணகிரி, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊத்தங்கரை தாலுக்காவில் PMJVkதிட்டத்தின் மூலம் புதியதாக அரசு தாலுக்கா மருத்துவமனை 100 கோடி ரூபாய் திட்டத்தில் G+5 என்ற கட்டட வடிவமைப்பில் கட்டிடவும், இடத்தேர்வு குறித்து கள ஆய்வும் மேற்கொண்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்று சென்னை திரும்பியது ஆய்வுக்குழு.