திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள,அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேசுவரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவானது வருகின்ற ஆகஸ்ட் 28 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று கால்கோள் நடும் விழா மற்றும் கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் , ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் , இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் , மாநில பிரச்சார குழு நிர்வாகி உமாமகேஷ்வரி , பெருமாநல்லூர் பேரூராட்சி தலைவர் சாந்தா மணி வேலுச்சாமி அவர்களும், பகுதி கழகச் செயலாளர்கள் ஜோதி, உசேன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.