நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
திருக்குவளை அருகே விடிவுகாலம் ஃபவுண்டேஷன் சார்பில் ஏழை எளிய அரசு பள்ளியில் பயின்ற 50 மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைப்பெற்றது…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஏழை எளிய மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பை தொடரும் வகையில் 6வது ஆண்டாக 50 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் விடிவுகாலம் ஃ பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நிறுவனர் செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் இணை நிறுவனர் சாந்தினி செந்தமிழ்ச்செல்வன், அருள் நந்தவனம் அறக்கட்டளை நிறுவனர் வைத்தியநாதன், ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்ட பொதுமக்கள் மாணவ ,மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.