லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது.

விருதுநகரில் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ், நிதிஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷனுடன் இணைந்து லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் நடத்திய நெக்ஸ்ப்ளோரர்ஸ் ப்ரோக்ராம் பயிற்ச்சியில் சுமார் 39 அடல் டிங்கேரிங் லேப் பள்ளிகளை சேர்ந்த 61 ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.

இந்த பயிற்சியானது கடந்த ஆண்டு ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, ப்ரோப்லம் சால்விங் ஸ்கில், கிரிட்டிக்கல் திங்கிங் ஐ மேம்படுத்த நடைபெற்றது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பின்பு ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு கற்பித்து அதன் மூலம் சிறந்த அறிவியல் முன்மாதிரிகளை உருவாக்கினார்கள்.

பின்பு அதன் தொடர்ச்சியாக இரண்டு ரெஃப்ரெஷர் ட்ரெய்னிங் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் நெக்ஸ்ப்ளோரர்ஸ் மெதடாலஜி பற்றிய கேள்விகள் மற்றும் கற்பிக்கும் பொழுது தாங்கள் எதிர் கொண்ட சவால்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

பின்பு அதன் தொடர்ச்சியாக இந்த கல்வி ஆண்டில் முதன்முறையாக ஜூலை 2ஆம் தேதி அன்று ரெஃப்ரெஷர் -3 ப்ரோக்ராம் பெல் ஹோட்டல் சிவகாசியில் நடைபெற்றது.

இதில், 37 ஆசிரியர்கள் கலந்துகொண்டு, எவ்வாறு அறிவியல் முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்பதை பற்றியும், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சாவல்களை எதிர்கொள்வதை பற்றியும், இந்த கல்வி ஆண்டில் வரவிருக்கும் போட்டிகளை பற்றியும் தெளிவு படுத்த பட்டது.

இதில், திரு. சிதம்பர நாதன் (மாவட்ட கல்வி செயலாளர் – சிவகாசி ) கலந்து கொண்டு ஆசிரியர்களின் மேம்பாடு மற்றும் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மேலும் அவர் ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை பற்றியும் தினமும் ஒரு மணி நேரம் ப்ராஜெக்ட் கு செலவழிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் மூலம் அவர்களின் ப்ராப்ளாம் சால்விங் ஸ்கில், கிரேட்டிவ் திங்கிங் போன்ற திறன்கள் மேம்படுவதாகவும், செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் .

இதை ஏற்பாடு செய்த லேர்னிக் லின்க்ஸ் பௌண்டேஷன் மற்றும் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *