சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ஸ்ரீ பாரதமாதா மெட்ரிக் பள்ளியில் ‘வாழும் விவேகானந்தர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பள்ளி தாளாளர் கோ. செல்வராஜ் தலைமை தாங்கினார். தெள்ளாறு புலவர் ந. பானு, ஹோமியோபதி டாக்டர் ஆர். பாமாபதி, சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம. சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பொன். ஜீனக்குமார் பங்கேற்று வாழும் விவேகானந்தர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை பயில வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கற்க கசடற அமைப்பு நிர்வாகி டாக்டர் இரா. பாஸ்கரன், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்களுக்கு விவேகானந்தர் பற்றிய பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி நிர்வாக குழு ஆலோசகர் பாலாஜி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *