நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், சிங்களாந்தபுரம் கிளை, சிங்களாந்தபுரம் கடைவீதி புதிய கிளை சார்பில் மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நவரத்தின விழா ராசிபுரம், போடிநாயக்கன்பட்டி ஸ்ரீ விக்னேஷ் மகாலில் நடந்தது.
சபரிமலை மகரவிளக்கு காலங்களில் உயிர்காக்கும் சேவையில் பணியாற்றிய பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர்.
புதிய கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 90 கிளைகள் படிவங்களை முழுமையாக வடிவமைத்த தேர்தல் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சிங்களாந்தபுரம் கிளை 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. சிங்களாந்தபுரம் புதிய கிளை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை தேர்தல் அலுவலர்கள் சென்னையை சேர்ந்த பெருமாள், பாண்டுரங்கன், சாய்ராமன் பங்கேற்று நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட சங்க தலைவராக பிரபு, செயலராக ஜெகதீஷ், பொருளராக செங்கோட்டையன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மத்திய மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் சங்க கொடியேற்றி வைத்தார்.