திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம் முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ மாணவியர்களிடம் தெரிவித்ததாவது
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் விரிப்புகள் பிளாஸ்டிக் தெர்மக்கோல் தட்டுகள் பிளாஸ்டிக் உறுஞ்சு குழாய்கள் பிளாஸ்டிக் மூலம் பூசப்பட்ட தேநீர் கோப்பைகள குவளைகள் பிளாஸ்டிக் தூக்கு பைகள் பிளாஸ்டிக் கொடிகள் பிளாஸ்டிக் உறைகள் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதப்பைகள் உள்ளிட்ட பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது

இருப்பினும் நாம் அனைவரின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதனை தடுத்து சுற்றுச்சுழல் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் நமக்கு மட்டும் தீமையன்று, மாடு போன்ற கால்நடைகளும் மிக பெரிய பாதிப்பினை சந்திக்கின்றது.

பிளாஸ்டிகினால் நீரானது பூமியை அடைவதனை தடுப்பதனால் நீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் வருங்காலங்களில் பாதிப்படையும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க நம் வீட்டிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்த குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் அளிக்க வேண்டும்.

எனவே சுற்றுச்சுழலை பாதுகாக்கும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி விற்பனை விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் சிற்றுண்டிச்சாலைகள் திருமண மண்டபங்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்கும்படியும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இதற்கு முன் நாம் அனைவரும் பயன்படுத்தி வந்த எளிதில் மக்கும் தன்மையுடைய இயற்கையில் கிடைக்கும் மாற்றுப்பொருட்களான மஞ்சள் துணிப்பைகள் சணல் பைகள் பாக்கு மட்டையிலான பொருட்கள் மண்பாண்டங்கள் பீங்கான் கண்ணாடி குவளைகள் மரக்கரண்டிகள் வாழையிலைகள் மற்றும் தாமரை இலைகள் போன்றவைகளை மீண்டும் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்

அதனைத்தொடர்ந்து கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மஞ்சள் துணிப்பை மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரிய மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் இரா.இரங்கராஜ் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் பணிநியமன குழு உறுப்பினர் வாரை பிரகாஷ் திட்டக்குழு உறுப்பினர் இரா. சங்கர் வட்டாட்சியர் செந்தில்குமார் உதவி மேலாளர் மு.மோகன் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *