கோவை

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவ ‘இதயங்கள் அறக்கட்டளைக்கு’ ‘ரெப்கோ ஹோம் பைனான்ஸ்’ நிறுவனம் 12,50,000 லட்சம் ரூபாய் வழங்கியது.

‘டைப் 1’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் கார்ப்பரேட் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதயங்கள் அறக்கட்டளைக்கு 12,50,000 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

கோவை காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இதயங்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் ரெப்கோ வங்கி மற்றும் இயக்குனர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் சந்தானம்,தலைவர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இயக்குனர் ரெப்கோ வங்கி தங்கராஜூ,இயக்குநர் ரெப்கோ வங்கி இன்னாசி,துணை பொது மேலாளர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் முரளிதரன் உள்ளிட்டோர் இதயங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் காசோலையை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி பெறும் ஏழை குழந்தைகளுக்காக ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் ரெப்கோ வங்கி தங்கராஜூ பேசுகையில் எங்கள் நிறுவனத்தின் தலைவர் ரெப்கோ வங்கி மற்றும் இயக்குனர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் சந்தானம் அவர்களின் தலைமையில் எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை எங்கள் நிறுவனம் சார்பில் செய்து வருகிறோம். இதயங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் உன்னதப் பணிக்கு உதவும் வகையில் ஏற்கனவே 12,50,000 ரூபாய் வழங்கினோம்.

அவர்கள் பணி சிறப்பாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் மேலும் பல ஏழை குழந்தைகள் மருத்துவ உதவி பெற உதவும் வகையில் தற்போது மீண்டும் 12,50,000 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளோம் என்று கூறினார். இதில் ஜேஜிஎம் ரெப்கோ வங்கி ராஜாராம் & குமார்,ஏஜிஎம் -உதவி பொது மேலாளர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் சிபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *