விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024 -25 ஆம் நிதியாண்டில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள பூவாணி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு. தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தலைமையேற்று முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறினார்.

வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் மண்வளத் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை விவசாயத்தை குறித்தும் ,ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பதும் குறித்தும் விளக்கினார்.

மேலும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தோட்டக்கலைத் துறையில் சம்பந்தமான திட்டங்களையும் நுண்ணுயிர் பாசனம் திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறினார்.

மேலும் இப் பயிற்சியில் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ரா. வீரபத்திரன் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறைகளையும், மண்புழு உரத்தின் சிறப்பு இயல்புகளும் எடுத்துரைத்தார் ,

பூச்சிகள் துறை வல்லுநர் டாக்டர் விஜயராகவன், பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை குறித்து விளக்கினார்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் திலகவதி தோட்டக்கலை துறை திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார்.

மேலும் இப் பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைக்கு இடுபொருள்கள் 50%மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும் ரோட்டவேட்டர் ரூ.34,000 மானியத்தில் விவசாயி வழங்கப்பட்டன .மேலும் தோட்டக்கலை துறை சம்பந்தமாக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

பயிற்சியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் மானியத்திட்டத்தில் வழங்கப்படக்கூடிய இடு பொருட்கள் சம்பந்தமான கருத்து காட்சி வேளாண்மை அலுவலரால் அமைக்கப்பட்டிருந்தன. பயிற்சிக்கான சிறப்பான ஏற்பாட்டை வேளாண்மை உதவி அலுவலர் கிருஷ்ண லீலா, விரிவாக்க சீரமைப்பு திட்ட அலுவலர்கள் ஜோதி மஞ்சுளா, மற்றும் மாரிமுத்து சிறப்பாக செய்திருந்தனர். பயிற்சி முடிவில் துணை வேளாண்மை அலுவலர் அம்மையப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *