போடிநாயக்கனூர் நகராட்சி வரிகளை வீடுகளுக்கே சென்று வசூல் செய்யும் வகையில் ஸ்வைப் பிங் இயந்திரம் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் வழங்கினார்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்ட அரங்கில் வருவாய் பிரிவு மூலம் எளிய முறையில் பொதுமக்களிடம் வரிகளை வீடுகளுக்கே சென்று வரிவசூல் செய்யும் வகையில் ஸ்வைப்பிங் இயந்திரத்தை நகராட்சி வருவாய் துறை அதிகாரிகளுக்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் வழங்கினார்.

தமிழக அரசு அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்யும் வகையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது அதன்படி போடி நகராட்சியில் ஸ்வைப்பிங் இயந்திரத்தின் மூலம் பொதுமக்களிடம் வரி வசூல் பெறுவதை நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கா ராஜலட்சுமி பொறியாளர் குணசேகரன் மேலாளர் முனிராஜ் வருவாய் ஆய்வாளர்கள் ராஜ் கபூர் மற்றும் காஜா நஜ்முதீன் உதவி பொறியாளர் எம். சரவணகுமார் சுகாதார அலுவலர் மணிகண்டன் நகராட்சி கட்டிட ஆய்வாளர் சுகதேவ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *