கோவை மதுக்கரை அருகே உள்ள கரடிமடை தீத்திபாளையம் பகுதியில் உள்ள தனியார் சிப்ஸ் கம்பெனிக்கு அருகில் உள்ள 150 அடி ஆழ கிணற்றில் புள்ளிமான் ஒன்று விழுந்துள்ளது
இந்த நிலையில் இது குறித்து அருகில் இருந்தவர்கள் மதுக்கரை பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்
அதனை தொடர்ந்து தகவலின் பெயரில் உடனடியாக சம்பவத்திற்கு விரைந்த வனத்துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்டனர்
அதனை தொடர்ந்து அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிறிது ஓய்வுக்கு பின்னர் அந்தமான் மீண்டும் கராடிமடை அருகே உள்ள பூலாம்பட்டி காப்பு காட்டில் விடப்பட்டது