ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள ASR parklane ஹோட்டலில் மாலை 6 மணி அளவில் ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் கிராண்ட் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
2023-2024 ஆம் ஆண்டு பதவி வகித்த நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 2024-2025க்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Rtn.MPHF. K.ரவிச்சந்திரன் தலைவராகவும்,
Rtn.பிரனவ்AR செயலாளராகவும்,
Rtn.J. வெங்கடேஷ் பொருளாளராகவும் பதவி ஏற்று கொண்டனர்.
2023-2024க்கான முன்னாள் பொறுப்பாளர்கள், முக்கிய விருந்தினர்கள் முன்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் ரோட்டரி கிளப்பின் எதிர்கால திட்டங்கள், செய்ய வேண்டிய கடமைகள், சங்கத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து முக்கிய விருந்தினர்கள் கருத்துறை வழங்கினர்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக Rtn. Major donor S.ராகவன்,
Rtn.D.கண்ணன்,அருட் சகோதரி ஏஞ்சலா
(தாளாளர் ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளி ஓசூர்)Rtn. சுபாங்கி செல்வகுமார்
(துணை கவர்னர் zone.12) ஆகியோர் வாழ்த்துரையும், கருத்துரையும் வழங்கி புதிய நிர்வாகிகளை பாராட்டினர்.
ரோட்டரி கிளப் ஆஃப் ஓசூர் கிராண்ட் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ரவிச்சந்திரன், பிரனவ், வெங்கடேஷ் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், சங்க முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.