தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே உள்ள தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திமுக சட்டத்துறை மற்றும் தேனி தெற்கு வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மத்திய ஒன்றிய அரசு இயற்றிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தனுஷ்கோடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி முன்னிலையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய அரசு இயற்றியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பக் கோரியும் இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்
ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட தெற்கு வடக்கு திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கண்டனத்தை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷத்தை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார்