திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி வட்டார இயற்கை வழி விவசாய அமைப்பு சார்பில் விதைத் திருவிழா நடைபெற்றது.
இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், மூலிகைகள், இயற்கை விவசாயப் பொருட்கள், விதைகள், அரிய வகை மூலிகை செடிகள், இயற்கை உணவுப் பொருட்கள், நாட்டு மருந்து பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கப்பட்டிருந்தது.
வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விதைத் திருவிழாவை நேரில் பார்வையிட்டு பல்வேறு பொருட்களை வாங்கியும் சென்றனர்.
இந்த நிகழ்வில் அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ். தளபதி, மாம்பட்டு ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு கருத்துரைகளை வழங்கினர். வந்தவாசியின் தன்னார்வல அமைப்பினர் பலரும் இதில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.