தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதிகளில் சோளம் விளைச்சல் அமோகம் விலை அதிகரிப்பால் மகிழ்ச்சியில் விவசாயிகள் தமிழகத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது
விவசாயிகள் செழித்தால் தான் நம் நாடு பல்வேறு பொருளாதார வளர்ச்சி அடையும் இதன்படி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் போடி அம்மாபட்டி பத்திரகாளி புரம் விசுவாசபுரம் பெருமாள் கவுண்டன்பட்டி டோம்புச்சேரி மற்றும் இதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சோளம் விளைவிக்கப்பட்டுள்ளது
இதன் விளைச்சல் அமோகமாக உள்ளது மேலும் கடந்த ஆண்டு குவிண்டால் ரூபாய் 1700 முதல் 1800 வரை விலை போனது தற்பொழுது குவிண்டால் 2300 முதல் 2400 வரை விலை போவதால் விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களின் விலையும் அதிகரித்து விளைச்சலும் அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்