யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 170 ஆவது வார நிகழ்வாக மரம் நடும் விழா, மதுரை ஒத்தக்கடை அம்மா பூங்காவில் நடைபெற்றது.
ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார்.
ஆலோசகர் பாண்டி தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஒத்தக்கடை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தன்னார்வலர் பாண்டியம்மாள் கலந்து கொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார்.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக பாண்டியம்மாளுக்கு ‘நவீன ஔவையார் விருது ‘
வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான மகிழம், செர்ரி மரங்களை, வலைகளை ஆலோசகர் பிரபு வழங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் செர்ரி மரங்கள் நடப்பட்டது. விழாவில் ஆலோசகர் ராகேஷ், சிவா கார்த்திகேயன், பாஸ்கரன்
சமூக ஆர்வலர்கள் அசோக்குமார்,சிவா, வினிதா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி முத்தருவி நன்றி கூறினார்.