மதுரையில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கட்டிடத்தில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், கள்ளர் பள்ளிகள் கிளை ( மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீரங்கநாதன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் முருகன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அருள்விஜய் மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் மாரீஸ்வரன் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர் களாக கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் ஜெயக்குமார், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், கல்வி அலுவலர் சவகர் ஆகியோர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்றவர்களை வாழ்த்தி பேசினர்.
மேலும் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சேதுசெல்வம், மாநில பொது செயலாளர் ஜெயக்குமார், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமரேசன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் அகில இந்திய செயலாளர் சுரேஷ்,தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முருகன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர்செந்தில்குமார், கள்ளர் பள்ளிகள் கிளை மாவட்டத் தலைவர் மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் சந்திரன், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்டத் தலைவர் பாண்டி, தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் கணேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன், கள்ளர் பள்ளிகள் கிளையின் மாவட்டச் செயலாளர் தீனன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட இணைச் செயலாளர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக கள்ளர் பள்ளிகள் கிளை மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.