எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி , ஜூலை 7,
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சீர்காழி ஆரோக்கிய அன்னை நர்சிங் கல்லூரி இணைந்து நடத்திய இருதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம், சீர்காழி ஏ.பால்சாமி நாடார் வாணிவிலாஸ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 250க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் கண்டறிதல், சர்க்கரை நோய் கண்டறிதல், இசிஜி, எக்கோ கருவி மூலமாக இருதய நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. ஒரு சில நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஆரோக்கிய அன்னை கல்லூரியின் தாளாளர் ஏ. ஞானசேகரன் வரவேற்க, லயன்ஸ் சங்கத்தலைவர் வி. சரவணகுமார் தலைமையேற்க, சுபம் வித்யா மந்திர் பள்ளி நிறுவனர் கியான்சந்த், சுதீஷ், ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எஸ். முரளீதரன் ஆகியோர் முன்னிலையில், மருத்துவ முகாமினை சீர்காழி தமிழ்ச் சங்கத் தலைவர் இ. மார்கோனி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு, பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா, பி.வி குழுமத் தலைவர் பி.வி வெங்கடேசன், சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கத் தலைவர் கே. விஜயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் என் ஜி ஓ ஜெய சண்முகம், சக்தி வீரன், ஸ்வீட் சந்துரு, யுவராஜ், ஆனந்த், சிங்கப்பூர் ஹாஜா மொய்தீன், வெங்கடேசன், ராமராஜன், மணிகண்டன், வேல்முருகன், முத்து, பள்ளி உதவி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர் பாலாஜி ஆகியோர் பங்கேற்க, நிறைவாக கல்லூரியின் முதல்வர் ஜி. வினோதா நன்றி கூறினார்.