மன்னார்குடி அருகே தென்பரை இலவச பயிற்சி மையத்தில் குரூப் 1 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் , தன்னார்வலர்கள் அமைப்பினர் பங்கேற்பு
மன்னார்குடி, ஜூலை.07
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை இலவச பயிற்சி மையம் கடந்த 2016 முதல் கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டித்தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்பை நடத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் வெற்றி பெற்று அரசு பணியில் அமர்த்தி வருகிறது .
இந்த மையத்தில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் போட்டித்தேர்விற்கு தயார் செய்து வருகின்றனர் இந்நிலையில் அரசு தற்போது குரூப் 2 தேர்வு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தேர்வு க்காக 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 முதல்நிலைத் தேர்வு வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது. தென்பரை இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 20 போட்டித் தேர்வர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கும் விழா மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் தென்பரை பயிற்சி மையத்தில் நுழைவு சீட்டும் வழங்கும் விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் , தன்னார்வலர்கள் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி இந்த மையத்தில் படித்த அனைவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்கள்.