ராஜபாளையம் அருகே இருதரப்பினரிடையே மோதல்! 77 பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சங்கரன்கோவில் ரோட்டில் முதுகுடி கிராமம் உள்ளது. அந்த கிராமம் மேற்கு பகுதியில் கண்மாய் ஒன்று அமைந்துள்ளது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாய்லாக மீன் பாசி ஏலம் விட்டுள்ளனர்.
இதனை முதுகுடி கிராம ஊர் பொதுமக்கள் சார்பாக கருப்பையா என்பவர் மீன் பாசி ஏலம் எடுத்துள்ளார். ஆனால் கடந்த மாதத்துடன் காலாவதியாகிவிட்டதாகவும், மறு ஏலம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மீன் பிடிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிவுள்ளது.
இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கருப்பையா உள்ளிட்ட 5 பேர் மீதும், கருப்பையா அளித்த புகாரின் பேரில் ராஜன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒருதரப்பினர் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2.50 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 12 பேர் உட்பட 62 பேர் மீது தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதுகுடி பகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே சாலை மறியல் நடந்தேறுவது வாடிக்கையாக உள்ளது.