திருவாரூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை கண்டித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தொடர்ச்சியாக நடக்கும் தலித் செயல்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் படுகொலையை தடுத்திடவும் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருவாரூர் புதிய ரயில்வே சந்திப்பு முகப்பு வாயில் முன்புகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல சங்கத் தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார் விசிக மைய மாவட்ட தங்க தமிழ்ச்செல்வன் மதிமுக கொள்கை விளக்க பொதுச்செயலாளர் ஆரூர் பா சீனிவாசன் நாகை திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சீனி செல்வம் மக்கள் ஜனநாயக கட்சி அப்துல்லா தொமுச அமைப்பின் பொருளாளர் தமிழ் குணசேகரன் பத்மநாபன் மணவழகன் உள்பட அனைத்து
ஜனநாயக சக்திகளும் சமூக ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர்