முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் கம்பம் நகரில் செய்தியாளர்கள் சந்தித்துக் கூறும் போது தேனி திண்டுக்கல் என ஐந்து மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும் பொது மக்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார்
மேலும் கம்பம் நகர் பகுதியில் மிக எளிமையாக சைக்கிளில் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்
நகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் உழவர் சந்தையில் உள்ள அதிகாரிகளிடம் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகளுக்கு உரியவில்லை கிடைக்க வேண்டும் இந்த உழவர் சந்தை திமுக நிறுவனத் தலைவர் மு கருணாநிதியின் உழவர்களுக்காக கொண்டுவந்த மகத்தான திட்டம் இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று கூறினார்
மேலும் உழவர் சந்தையில் அன்றாட காய்கறிகள் விலை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதை அடுத்து நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உடன் கம்பம் நகரின் தொழிலதிபரும் திமுக நிர்வாகியுமான வேல்பாண்டியன் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்