தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு உள்ள முக்கல் நாயக்கன் பட்டி ஊராட்சி கீழ் ராஜா தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எம்எல்ஏ அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் . உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, செயற்பொறியாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், கோபால், துணைத் தலைவர் ஜெகநாதன் மற்றும் கட்டிட ஒப்பந்தர் சசிகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.