ராஜபாளையம் சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் முதல்வரும் ஒரிசா முன்னாள் ஆளுநர் பி எஸ் குமாரசாமி ராஜா அவர்களின் 126 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பூபதி ராஜா கூட்டுறவு வங்கியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திரு உருவச் சிலைக்கு பூபதி ராஜா கூட்டுறவு வங்கி தலைவர் நகர்மன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் ஜனதா செம் எம்டி சின்ன வெங்கட் ராஜா ஊர் காவல் படை மதுரை மண்டல துணை தளபதி பி ஏ ராம்குமார் ராஜா பி ஆர் குமாரசாமி ராஜா வங்கி ஊழியர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பச்சமடம் கோட்டையில் உள்ள திருவுருவ சிலைக்கு கோட்டை தலைவர் ஜெகநாதராஜா பாரதமாதா அறக்கட்டளை ரவீந்திரராஜா நகர்மன்ற உறுப்பினர் ராதாமாரிமுத்து ஆகியோரும் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது