நாமக்கல் மாவட்டம்.திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் எளையாம்பாளையம் நெய்க்காரம்பாளையம் பகுதியில் பி.ஏ. ராஜா கல்குவாரி கடந்த ஜனவரி மாதம் புதிய கல்குவாரி அனுமதி வழங்க இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ராஜா கல்குவாரி இயங்கி வருவதால் இதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என போராடி வருகின்றனர்.
போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் சொந்த நிலத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர் காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவிக்கபட்டனர் பின்னர் விவசாயிகள் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கோக்கலை.நெய்க்காரம்பாளையம். எளையாம்பாளையம். குஞ்சாம்பாளையம். பெரியமணலி . குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள்
கோரிக்கை மனுவுடன் கோரிக்கைகள் பொருத்திய பேனர் உடலில் போட்டுக் கொண்டு நூதனமான முறையில் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.