கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வண்டல் மண் என்கின்ற பெயரில் செம்மண் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் விவசாயிகள் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவித்தார். ஆனால் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெறாமல் கடத்தல்காரர்கள் சிலர் கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் செம்மண்ணை வெட்டி எடுத்து, குவித்து, விற்பனை செய்து வருகிறார்கள். எனவே விவசாயிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடத்தல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும். அரசு உத்தரவுக்கு மாறாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.