அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்ததையொட்டி 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடந்தது.
மங்கல இசை முழங்க யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு புனித திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து ஶ்ரீ முத்தாலம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல பூஜையும் அதனை தொடர்ந்து கிடாய் வெட்டி சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மாலையில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டி 108 திருவிளக்கு பூஜையி்ம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கொழிஞ்சிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.